ஞாயிறு, அக்டோபர் 16, 2005

இக்கரையில் முத்திரை பதிப்போம்!

இக்கரையில் முத்திரை பதிப்போம்!


நித்திரையில் பூத்த கனவு மலர்கள் நினைவில்
இத்தரையில் முத்திரை பதிக்க முயலும் மனிதர்களே!
சித்திரை வானத்தில் விண் பூக்கள் நடுவில்
மலர்ந்த வெண்தாமரை வட்ட நிலா உண்டு.
சித்திரையில் வனத்தில் பூத்த மரங்களும் உண்டு.
மாபூத்து மனிதர்களுக்கு காய் பழம் தருவதுமுண்டு.
வேம்பும் பூத்து பறவையினம் பழம்பெறும் வழியுமுண்டு
பூக்காமல் காய்த்து பழுத்து பலந்தரும் பலாவுமுண்டு

நெட்ட நெடுமரமாய் வளரும் மனிதன்
பூப்பதுமில்லை; காய்ப்பதுமில்லை
அவன் பழுத்த பழமானாலும்
யாருக்கும் பலன் இல்லை.

இக்கரைக்கு அக்கரைப் பச்சையென
அக்கரை சீமையிலே பசை தேடுவான்
அக்கரையோடு உழைத்தால்
இக்கரை பசுமை அறிவானே!

பழுத்த பழம் தின்னும் பறவைகள்
விடுத்த விதைகள் செடியாகி, மரமாகி
பூத்துக் காய்த்து, மறுபடியும் பழந்தரும்
விந்தை வழியை மனிதன் பார்த்தானா?

நெடிய பலமரமும்
இத்தரையில் பதித்த
முத்திரை விதையும்
அறிய மறந்த மனிதன்
இத்தரையில் முத்திரை பதிக்க
மரமாய் மாற வேண்டாம்.
மனிதனாய் மகிழ்ந்து வாழவேண்டும்
சித்திரை முதல் அவன் சிந்தை
வளரட்டும்; சொற்பகை மறையட்டும்
நிறைந்த சாதனை பல படைக்கட்டும்
'இத்தரையில் முத்திரை பதிக்க'
எழுத்தறிவையும் இறையுணர்வையும் ஊட்டட்டும்.

4 Comments:

Blogger G.Ragavan said...

அருமையான கவிதை ரங்கா. வயதான பெற்றொர்களுக்குத் தேவை பிள்ளைகளின் அரவணைப்பு. அதை எப்பாடு பட்டாவது கொடுக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. உங்கள் தந்தையின் விருப்பமும் அதில்தான் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.

12:43 AM  
Blogger ரங்கா - Ranga said...

qதங்கள் பாராட்டுக்கு நன்றி இராகவன். என் தந்தையாரும் தங்கள் கவிதையைப் படித்தார் - பாராட்டினார்!

ரங்கா.

12:52 PM  
Blogger Unknown said...

I am overwhelmed with the intensity of the words and meanings of this poetry. When it is has become to leave the parents at 'old age home' in search of wealth in overseas countries even without able to spare time to even speak softly to one's own parents, this poetry is an oasis.
V. Chandrasekhar

7:36 AM  
Blogger ரங்கா - Ranga said...

Thanks Mr. Chandra Sekhar!

9:22 AM  

கருத்துரையிடுக

<< Home