வெள்ளி, டிசம்பர் 23, 2005

முகில்

முகிலே!

வெண் பொதியாய் விண்ணில் திரிவதை விட்டு
மண்ணில் மனிதர்களும் மரங்களும் வாழ
ஆழ்கடலிலிருந்து அமுதம் பெற்றது போல்
உப்பை நீக்கி உயர் நீரைப் பெற்று,
கார் முகிலாய் கருமை நிறம் பெற்றாய்!

உருவம் கருத்தாலும் உள்ளம் உயர்ந்ததென
உவந்து கண்ணனும் கார்வண்ணன் எனப்பெயர் கொண்டான்,
கண்ணனுக்கு பெயர் தந்த வள்ளல் நீ!

கார்முகிலே!

நீழ்கடலின் அலைத் துளியிலிருந்து
உவர்ப்பை நீக்கி உயிர்நீரைப் பெற்றாய்.
வெள்ளித்தட்டாய் வானில் மிதந்த நீ
கருந்திட்டாய், கடல் காடு மலை கடந்து
நாடு நகரம் செழிக்க நல்மழையாய்
உலகெங்கும் பெய்து கரைந்தாய்.

உன் உயர்குணம் கண்டு உவகை கொண்டோம்
வாரி வழங்கும் வான்மழை மேகமே
உன்னை வாழ்த்தி வணங்குகிறோம்!

ஒரு கோடையில் பெய்த மழையைப் பார்த்து என் தந்தை எழுதியது - பத்து வருடங்களுக்கு முன்னால்.

4 Comments:

Blogger கீதா said...

உங்கள் தந்தைக்கு என் வாழ்த்துக்களை தெரிவியுங்கள்.

கவிதை நன்று

இப்படி இருந்திருந்தால் இன்னும் சுருக்கமாகவும் சுவை குன்றாமலும் இருந்திருக்கும்.

-

முகிலே!

வெண் பொதியாய் விண்ணில் திரிவதை விட்டு
மண்ணில் மனிதர்களும் மரங்களும் வாழ
ஆழ்கடலிலிருந்து அமுதம் பெற்றது போல்
உப்பை நீக்கி உயர் நீரைப் பெற்று,
கார் முகிலாய் கருமை நிறம் பெற்றாய்!

உருவம் கருத்தாலும் உள்ளம் உயர்ந்ததென
உவந்து கண்ணனும் கார்வண்ணன் எனப்பெயர் கொண்டான்,
கண்ணனுக்கு பெயர் தந்த வள்ளல் நீ!

கார்முகிலே

உன் உயர்குணம் கண்டு உவகை கொண்டோம்
வாரி வழங்கும் வான்மழை மேகமே
உன்னை வாழ்த்தி வணங்குகிறோம்!

-

எந்த மாற்றமும் செய்யவில்லை நடுவில் ஒரே கருத்தை திரும்பச்சொல்லும் ஒரு பத்தியை நீக்கினேன் அவ்வளவே..


அன்புடன்
கீதா

3:34 PM  
Blogger ரங்கா - Ranga said...

நன்றி கீதா. என் தந்தையிடம் தெரிவித்துவிட்டேன்! ;-)

நீங்கள் சொல்வது சரி. என் தந்தை எப்போதோ காகிதத்தில் எழுதி வைத்ததை அப்படியே போட்டு வருகிறேன்; சில படைப்புகளை அவர் திருத்தி முடித்திருக்கவில்லை.

ரங்கா.

10:07 AM  
Blogger  வல்லிசிம்ஹன் said...

ரங்கா,அப்பா இவ்வளவு எழுதுவார் என்று தெரியாது. மிகவும் எளிமையான வரிகள் உடனே மனதில் பதிய,
புரியும்படி எழுதி இருக்கிறார்.

9:33 PM  
Blogger ரங்கா - Ranga said...

பாராட்டுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி வல்லியம்மா :-) தந்தையிடம் சொல்கிறேன்.

ரங்கா.

7:48 PM  

கருத்துரையிடுக

<< Home