ஞாயிறு, மார்ச் 19, 2006

குயிலும் காக்கையும்!

பதினேழு வருடங்களுக்கு முன்பு வீட்டிற்கு வந்த இரு நண்பர்களோடு என் தந்தை பேசிக்கொண்டிருந்தார் - நல்லவர்கள் அரசியலுக்கு வரலாமா? என்பது பற்றி. அப்போது எழுதிய கவிதை இது:

நாட்டு நடப்பைக் கண்டு
உண்மைக் குயில்கள்
சோககீதம் கூட இசைக்க
மறந்து மௌனமானால்,

பதவிக் காக்கைகள்
பலகூடி கோரமாய்
கோஷ்டிகானம் பாடும்.

புதன், மார்ச் 08, 2006

தனிமை!

கூட்டத்திலே நான்,
என் எண்ணங்களோடு தனியாக!

தனிமையிலே நான்,
என் எண்ணக் கூட்டத்திலே!


When I am in a crowd,
I am alone with
my thoughts.

When I am alone,
I am crowded with
my thoughts.

என் தந்தை பதினைந்து வருடங்களுக்கு முன் ஆங்கிலத்தில் எழுதிய கவிதை; என் தமிழ் மொழியாக்கத்தோடு!